தனுஷ் இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் அறியப்படும் நடிகர். நடிப்பு என்றால் உடல் எடையை ஏற்றுவது குறைப்பது என்று தான் பலரும் நடித்து வந்தனர்.
ஆனால் நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்திற்கு நாம் கொடுக்கும் உயிர் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிக்ஸர் அடித்தவர் தனுஷ்.
முதல் படம் துள்ளுவதோ இளமை அப்பா இயக்குனர் என்றால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாமா? இவர் எல்லாம் நடிகனா? என்று தன் தந்தை முன்பே அவமானப்பட்டவர் தான் தனுஷ்.
ஆனால் இன்று இந்தியாவே தன் மகனின் நடிப்பை கொண்டாடுவதை முதலில் ரசிக்கும் தகுதி கஸ்தூரி ராஜாவிற்கே உள்ளது.
தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார், பல வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நான் ஜனாதிபதி கையால் விருது வாங்குவேன் என்று சொல்லும் போது சிரிக்காதவர்கள் இல்லை.
ஆனால் இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தேசிய விருதை பெற்று வந்துவிட்டார். இப்படி தன் குறைகளை நிறைகளாக்கி சாமானியனுக்கும் தைரியம் கொடுத்த ரியல் லைப் ஹீரோ தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment