நடிகர் தனுஷ் தற்போது ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், படத்தில் வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. கடைசியாக, சண்டைக்காட்சியுடன் முடிந்திருக்கிறது. இந்நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ளது. நடிகை சாய் பல்லவி தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். அவர் திரும்பி வந்ததும் தனுஷுடன் இணைந்து டூயட் பாடவுள்ளார்.
No comments:
Post a Comment