தனுஷ் தற்போது வடசென்னை ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷை நாயகனாக வைத்து இயக்கிய படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் நேற்று வெளியான சஞ்சு படத்தை பார்த்துள்ளார், படத்தை பார்த்து முடித்துவிட்டு டுவிட்டரில் புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதில் ‘ எப்படி ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு படத்தை எடுக்கின்றீர்கள் ராஜ் குமார்ஹிரானி அவர்களே, ரன்பீர் நீங்கள் கலக்கி விட்டீர்கள், ஹிரானி உங்கள் படத்தை பார்க்கும் போது மேலும், ஒரு நல்ல மனிதனாக மாற தோன்றுகின்றது.
அதோடு கொஞ்சம் ஆனந்த கண்ணீருடன் தான் தியேட்டரை விட்டு வந்தேன் ’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment