தனுஷ்-கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்- புது அப்டேட்
எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை வாங்கிய கே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜராஜன் வாங்கியுள்ளார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷை நாயகனாக வைத்து இயக்கிய படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
அச்சம் என்பது மடமையடா’ படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தொடங்கினார் கௌதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது சில பிரச்னைகளால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனே விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கவனம் செலுத்த துவங்கினார் கௌதம் மேனன்.
இப்போது தனுஷ்-கௌதம் மேனன் படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் தனுஷிற்கு அண்ணனாக நடிக்க சசிகுமார் கமிட்டாகி இருக்கிறாராம்.
நடுவில் சில பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜுலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. சசிகுமார் நடித்திருக்கும் அசுரவதம் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜுன் 29) வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment