வேலையில்லா ஒரு இளைஞனை பற்றிய படம் என்பதால் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னை பற்றிய படம் போல் தோன்ற வைத்தது. மேலும் இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.
இந்நிலையில் இப்படத்தை அப்படியே காப்பியடித்து மராத்தியில் MAHJA NAAV SHIVAJI என்ற படத்தை எடுத்துள்ளனர். ஒரு காட்சியென்றாலும் பரவாயில்லை மொத்த திரைப்படத்தையும் நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்துள்ளனர். எந்தவொரு அனுமதியும் வாங்காமல் எடுக்கப்பட்டதால் இந்த செய்தி தனுஷின் கவனத்திற்கு சென்றவுடன் அந்த தயாரிப்பாளர் மீது காப்பிரைட்ஸ் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் MAHJA NAAV SHIVAJI படம் விஐபி-ஐ அப்படியே காப்பி செய்த்துள்ளதை உறுதி செய்து தனுஷுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனால் தனுஷிற்கு நஷ்ட ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment