வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘ஆடுகளம்’. இப்படம் தேசிய விருது பெற்று, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இருவரது கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வட சென்னை’. இதன் முதலாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் டிரைலர் தனுஷ் பிறந்தநாளான வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் வட சென்னை படத்தின் பாடல்கள் குறித்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வட சென்னை படத்திற்கான இசை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. வெற்றிமாறனின் பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கௌரவமாக நினைக்கிறேன். கடுமையான உழைப்பை செலுத்திய தனுஷிற்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் நிறைந்த ஏரியா குத்து பாடல்களுடன் மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
No comments:
Post a Comment